Sunday, January 14, 2018

பலரது பாராட்டுகளை பெற்றுக்கொண்ட பேருந்து நூலகம்
இலங்கையில் சேவையில் ஈடுப்பட்டு வரும் பேருந்து ஒன்றில் நூலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பலரும் தங்களது பாராட்டுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

நாளாந்தம் மக்கள் அதிகமாக போக்குவரத்தை அரச மற்றும் தனியார் பேருந்துகளில் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பேருந்துகளில் இசை மற்றும் திரைப்படங்கள் ஒளிபரப்பப்படுவது வழக்கம்.இது பணிகளுக்கு மகிழ்ச்சியை அல்லது வெறுப்பை தரக்கூடியதாக அமையும்.

ஆனால், மக்களின் பாராட்டை பெற்றுக் கொள்ளும் வகையில் தனியார் பேருந்து ஒன்றில் சிறிய நூலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த பேருந்து ஹொரன - கண்டி பகுதிகளுக்கான போக்குவரத்து சேவையில் ஈடுப்பட்டுள்ளது.


இந்த நூலகத்தில் சிறிய கதை புத்தகங்கள் மற்றும் நாவல்கள்,பொது அறிவு போன்ற சிறந்த நூல்கள் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, பணிகள் தங்களுக்கு தேவையான புத்தக்களை எடுத்து வாசிக்க முடியும் எனவும், இதற்கு கட்டணம் எதும் செலுத்தத் தேவை இல்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

Sltnews.com
www.facebook.com/sltnews
www.youtube.com/channel/UClKoydhrmaq62unPGYJRilA

Twitter @SLTamilnews

எமது முகநூல் பக்கம் மற்றும் blogger பக்கத்தில் வெளியிடப்படும் அனைத்து செய்திகளும் சமகாலத்தில் வெவ்வேறு இணையத்தளங்களில் வெளியான செய்திகளும் முகநூல்களில் பிரசுரிக்கப்படும் செய்திகளுமே ஆகும்!
எனவே எந்த செய்திகளுக்கும் நாங்கள் பொறுப்பல்ல!

Friday, January 12, 2018

வாட்ஸ் ஆப் வசதியில் மிகப்பெரிய குறைபாடு: எச்சரிக்கை
வாட்ஸ் ஆப் செயலியானது உலகளவில் பரந்துபட்டு பயன்படுத்தப்படும் செயலியாக காணப்படுகின்றது.
இச் செயலியில் அண்மையில் குழுவாக இணைந்து சட் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இவ் வசதியில் பாரிய குறைபாடு இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது அட்மினின் அனுமதியின்றி யாரேனும் இக் குழுவில் இணைந்து சட் செய்யக்கூடியதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப் பாதுகாப்பு குறைபாடு தொடர்பில் ஜேர்மன் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் குழு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுமார் ஒரு பில்லியனிற்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தும் செயலியில் இவ்வாறான குறைபாடு காணப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த ஆராய்ச்சியாளர் குழுவின் எச்சரிக்கையின் பின்னர் விரைவில் இக் குறைபாடு நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Wednesday, January 10, 2018

குழந்தையில்லாம கஷ்படுரீங்களா ! உடனே இந்த பரிகாரத்தை செய்யுங்க... புத்திரபாக்கியம் உண்டாகும்!

ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 5ம் பாவம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதை போலவே சந்திரனுக்கு 5ம் பாவமும் பலமாக அமைந்து விட்டால் குழந்தை பாக்கியம் அமைய எந்தத் தடையும் இருக்காது.

நாம் சேர்த்து வைத்த புண்ணியம்தான் குழந்தையாகப் பிறக்கும் என்பார்கள். ஜாதகத்தில் 5ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானமாகவும் திகழ்கிறது.

குழந்தை பாக்கியத்திற்கு பொன்னவன் எனப்படும் குரு பகவானின் நிலை, பார்வை மிகவும் அவசியமாகும். ஐந்தாம் இடத்தில் ராகு, செவ்வாய், சனி அல்லது சூரியன் அமர்ந்தால் ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போகும் அல்லது தாமதமாக கிடைக்கும்.

குரு, செவ்வாய், சுக்கிரன்

புத்திரகாரகன்

குரு புத்திர காரகன் ஆவார். செவ்வாய் அருளால்தான் தாம்பத்யத்தில் முழுமையாக ஈடுபட முடியும்.

பெண்களின் மாதவிடாய் பிரச்னைகளுக்கு காரணமாக இருப்பவர் இவர். பெண்கள் பூப்பெய்துவதற்கும் இவரே முக்கிய காரணம். சுக்கிரன், சிற்றின்பத்தில் நாட்டம் கொள்ளச் செய்பவர்.

ஒரு தம்பதியின் ஜாதகங்களில் இந்த மூன்று கிரகங்கள் நல்ல வலிமையுடன் ஆட்சி, உச்சம், கேந்திரம், திரிகோணம் பெற்று நல்ல அம்சத்தில் இருந்தால் விரும்பிய புத்திர யோகம் தானாக கூடிவரும்.

5ஆம் வீடு

ஜாதகத்தில் 5ஆம் வீடு

5ம் வீட்டையும், 5ம் வீட்டதிபதியையும் குரு பகவான் பார்வை செய்தால் குழந்தை செல்வம் சிறப்பாக அமைந்து மகிழ்ச்சியை உண்டாக்கும். 5ம் வீட்டில் சுப கிரகம் இருப்பதும், சுபர் பார்வை பெறுவதும் சிறப்பானது.

பெண் கிரகங்களின் தசா புக்தி காலத்தில் பெண் குழந்தையும் ஆண் கிரகங்களின் தசா புக்தி காலத்தில் ஆண் குழந்தை யோகமும் கொடுக்கும்.

குழந்தை தாமதம்

தடை ஏற்பட காரணம்

5ம் அதிபதி 6, 8, 12ல் மறைந்திருந்தாலும் 5ம் அதிபதியையும், 5ம் வீட்டையும், குரு பகவானையும், சனி பார்வை செய்தாலும் திருமணம் நடைபெறும் காலங்களில் சர்ப கிரகங்களின் தசா புக்திகள் நடைபெற்றாலும், புத்திர பாக்கியம் அமைவதில் தாமதம் உண்டாகும். கருச்சிதைவு, கருத்தறிக்கத் தடை ஏற்படும்.

ஆண் வாரிசு

பெண் வாரிசு

குரு, சூரியன்,செவ்வாய் வலுப்பெற்று 5ல் இருந்தாலும் 5ம் அதிபதியுடன் இருந்தாலும் ஆண் கிரகங்களின் வீடான வர்ணிக்கப்படக் கூடிய மேஷம், விருச்சிகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய பாவங்களில் 5ம் அதிபதி பலமாக அமைந்திருந்தாலும் ஆண் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

சுக்கிரன் சந்திரன் 5ஆம் இடத்தில் வலுவாக அமைந்தாலும் 5ஆம் அதிபதியாக சுக்கிரன், சந்திரன் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் சந்திரன் வீடான கடகத்தில் அமைந்திருந்தாலும் பெண் குழந்தை யோகம் உண்டாகும்.

தத்தெடுக்கும் குழந்தை

தத்து புத்திர யோகம்

5ம் இடம் புதனின் வீடான மிதுனம், கன்னியாகவோ, சனி வீடான மகரம் கும்பமாகவோ இருந்து அதில் சனி மாந்தி அமையப் பெற்று, புத்திர காரகன் குருவும் பலவீனமாக இருந்தால் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் நிலை ஏற்படும்.

ஆண் ஜாதகத்தில் விருச்சிக ராசியில் சூரியன், சுக்கிரன் சேர்ந்து இருந்தால் புத்திர தடை. ஐந்தாம் அதிபதியும்-ராகுவும் சேர்ந்து 6, 8, 12ல் இருந்தால் தத்து புத்திரயோகம் கிடைக்கும்.

பலன் தரும் பரிகாரங்கள்

கரு காக்கும் அன்னை

குழந்தை வரம் வேண்டுவோர் சென்னையிலுள்ள அண்ணாநகரை அடுத்த முகப்பேரில் உள்ள அருள்மிகு சந்தான ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் சந்தான கோபால பூஜை செய்வது சிறந்த பலனளிக்கும்.

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயில் குழந்தை பாக்யதடையை நீக்கும். அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுபவர்கள் இத்தலத்து அம்பாளை பிரார்த்தித்து, இங்கு தரப்படும் பசுநெய், விளக்கெண்ணெய் பிரசாதத்தை சாப்பிட வேண்டும்.

கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் நீடாமங்கலம் பேருந்து நிலையத்திற்கு அருகில் புத்திர பிராப்தி தரும் சந்தானராமன் ஆலயம் உள்ளது. இங்கு ராமபிரான் சந்தான யோகம் தருகிறார்.


Sltnews.com
www.facebook.com/sltnews
www.youtube.com/channel/UClKoydhrmaq62unPGYJRilA

Twitter @SLTamilnews

எமது முகநூல் பக்கம் மற்றும் blogger பக்கத்தில் வெளியிடப்படும் அனைத்து செய்திகளும் சமகாலத்தில் வெவ்வேறு இணையத்தளங்களில் வெளியான செய்திகளும் முகநூல்களில் பிரசுரிக்கப்படும் செய்திகளுமே ஆகும்!
எனவே எந்த செய்திகளுக்கும் நாங்கள் பொறுப்பல்ல!

ஒரே நேரத்தில் மூன்று பெண்களை மணந்த ஜகஜாத கில்லாடி!

உகாண்டாவைச் சேர்ந்த 50 வயது முகமது ஸெமன்டா, ஒரே நேரத்தில் 3 திருமணங்களைச் செய்து, ஆப்பிரிக்கா முழுவதும் பிரபலமாகிவிட்டார்! உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார் இவர்.

48 வயது சல்மாத் நலுவுக், 27 வயது ஜாமியோ நகாயிஸா, 24 வயது மஸ்டுல்லா நாம்வான்ஜே என்ற மூன்று பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்துவிட்டார்.

மூவரும் வெள்ளை ஆடையில் கிரீடம் சூட்டிக்கொண்டு முகமதுவை இன்முகத்துடன் திருமணம் செய்திருக்கிறார்கள். “தனித் தனியாகத் திருமணம் செய்வதற்கு என்னிடம் வசதி இல்லை. அத்துடன் இந்த மூன்று பெண்களும் ஒரே நேரத்தில் திருமணம் செய்ததை நினைத்துச் சிறிதும் வருந்தவில்லை.

திருமணம் ஒன்றாக நடைபெற்றாலும் மூவரும் தனித் தனி வீடுகளில்தான் வசிக்கப் போகிறார்கள். நான் இன்னும் கடினமாக வேலை செய்து, மூன்று மனைவிகளையும் மகிழ்ச்சியாகப் பார்த்துக் கொள்வேன். நான் யாரையும் ஏமாற்றி, திருமணம் செய்துகொள்ளவில்லை. 48 வயது சல்மாத் என்னுடைய முதல் மனைவிதான். 20 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நடந்து, 5 குழந்தைகளும் எங்களுக்கு இருக்கிறார்கள்.

ஜாமியோ, மஸ்டுல்லா இருவரும் சல்மாத்தின் தங்கைகள். இவர்கள் இருவருக்கும் ஏற்கெனவே திருமணமாகி, குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் வாழ்க்கை சரியாக இல்லை. அதனால் அவர்கள் இருவரையும் நான் திருமணம் செய்துகொண்டு, காப்பாற்ற முடிவெடுத்தேன்.

இதில் அந்தப் பெண்களுக்கும் முழுச் சம்மதம். என் மனைவிக்கும் சம்மதம். இருவரைத் திருமணம் செய்யும்போது, என் மனைவிக்குப் பொறாமை வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் மீண்டும் அவரைத் திருமணம் செய்துகொண்டேன். மூவரும் சகோதரிகள் என்பதால் இங்கே போட்டி, பொறாமைக்கு வழியே இல்லை” என்கிறார் முகமது.


Sltnews.com
www.facebook.com/sltnews
www.youtube.com/channel/UClKoydhrmaq62unPGYJRilA

Twitter @SLTamilnews

எமது முகநூல் பக்கம் மற்றும் blogger பக்கத்தில் வெளியிடப்படும் அனைத்து செய்திகளும் சமகாலத்தில் வெவ்வேறு இணையத்தளங்களில் வெளியான செய்திகளும் முகநூல்களில் பிரசுரிக்கப்படும் செய்திகளுமே ஆகும்!
எனவே எந்த செய்திகளுக்கும் நாங்கள் பொறுப்பல்ல!

Tuesday, January 9, 2018

பரிஸ் - காவல்துறையினரின் தலைமையக வளாகத்தில் குழந்தை பெற்றுக்கொண்ட பெண்!-
பரிசில் ஒரு வினோத சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெண் ஒருவர் தனது குழந்தையை காவல்துறையினரின் தலைமைச் செயலகத்தின் வளாகத்தில் வைத்து பெற்றெடுத்துள்ளார்.

இத்தகவலை காவல்துறையினரின் உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை பெண் ஒருவர் பரிசில் உள்ள காவல்துறையினரின் தலைமைச்செயலகத்தின் வளாகத்துக்குள் சடுதியாக நுழைந்துள்ளனர். பிரசவ வலி எடுத்துள்ளதாலேயே தாம் உள்ளே நுழைந்ததாக அப்பெண் குறிப்பிட்டார். பின்னர் காவல்துறையினர் உதவியுடன் அப்பெண் அழகான ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.

இத்தகவலை இணையத்தில் பகிர்ந்ததன் பின்னர், பலர் இதுகுறித்து பரவலான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கடந்த வருடத்திலும் இதுபோன்ற ஒரு சம்பவம் 17 ஆம் வட்டார காவல்நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்றிருந்தமை வாசகர்கள் அறிந்ததே.


Sltnews.com
www.facebook.com/sltnews
www.youtube.com/channel/UClKoydhrmaq62unPGYJRilA

Twitter @SLTamilnews

எமது முகநூல் பக்கம் மற்றும் blogger பக்கத்தில் வெளியிடப்படும் அனைத்து செய்திகளும் சமகாலத்தில் வெவ்வேறு இணையத்தளங்களில் வெளியான செய்திகளும் முகநூல்களில் பிரசுரிக்கப்படும் செய்திகளுமே ஆகும்!
எனவே எந்த செய்திகளுக்கும் நாங்கள் பொறுப்பல்ல!